யாழில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்து: நால்வருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்று மதியம் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் நாலவர் காயமடைந்துள்ளனர்.
மூன்று பெண்களும் ஒரு குழந்தையுமே விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 6 times, 1 visits today)





