வெடிபொருட்களுடன் கடலில் மூழ்கிய கப்பல் : பிரித்தானியர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய ஆபத்து!
தேம்ஸ் நதியில் சுனாமியை கட்டவிழ்த்து விடப்போவதாக அச்சுறுத்தும் வெடிபொருட்கள் நிறைந்த ‘டூம்ஸ்டே ரெக்’ மீது பிரிட்டன் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
SS Richard Montgomery கப்பல் ஆகஸ்ட் 1944 இல், கென்ட்டின் ஷீர்னஸ் அருகே தேம்ஸ் கரையோரத்தில் மூழ்கியது.
இந்த கப்பலில் இரண்டாம் உலகபோருக்காக 1,400 டன் வெடிபொருட்கள் கொண்டுச்செல்லப்பட்டது. இந்நிலையில் குறித்த கப்பலானது வெடிபொருட்களுடன் கடலில் மூழ்கியது.
தற்போது கப்பல் சிதைவடைந்துள்ள நிலையில், அதில் இருந்த வெடிபொருட்கள் நீரில் புதைந்துள்ளன.
வெடிபொருட்கள் புதைந்துபோயுள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் அல்லது, ஏதேனும் உராய்வு ஏற்படும் பொழுது அவை வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
அவற்றை எவ்வித பாதிப்பும் இன்றி அப்புறப்படுத்துவதற்கான திட்டம் ஒன்று இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவ் திட்டம் மாத்திரம் போதாது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் முக்கிய பகுதி இடிந்து விழுவதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளதால் அரசாங்கம் அச்சத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் இது தொடர்பில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர் எழுதியுள்ள ஓர் கட்டுரையில், விலக்கு மண்டலம் ஒரு பெரிய கப்பல் பாதையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், இதன்வழியாக திரவமாக்கப்பட்ட எரிவாயு கப்பல்கள், மிகப் பெரிய கொள்கலன் கப்பல்கள் கடந்து செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இந்நிலை மிகவும் மோசமாகவுள்ளதாகவும், மிகப் பெரிய ஆபத்து காத்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.