ஐரோப்பா

யூடியூபர் ஒருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்!

போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் பொலிஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ரஷ்யா – உக்ரைன் யுத்தம் தொடர்பான போலி புகைப்படம் ஒன்றை நோஸ்ட்ரினோவ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாகக் கூறி பொலிஸார் அவரை கைது செய்தனர். ஆனால் நோஸ்ட்ரினோவின் மனைவி எகட்டெரினா, அப்படியான புகைப்படம் எதையும் நோஸ்ட்ரினோவ் பகிரவில்லை என்றும், இது அவரை பழிவாங்கும் நோக்கில் பொலிஸாரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த சூழலில் இந்த வழக்கை நேற்று (29) விசாரித்த கிராஸ்னோடர் நீதிமன்ற நீதிபதி, நோஸ்ட்ரினோவ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

உக்ரைன் மீதான போர் தொடங்கியதன் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தை முடக்குவது, அரசாங்கத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவது அல்லது அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!