கொழும்பில் பெண் ஒருவர் மீது சரிமாரியான வாள் வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை பகுதியிலுள்ள “லக்ஹிரு செவன” அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பாத்திமா ரிஸ்வான் என்ற 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
“என் சகோதரி வெட்டப்பட்டார். மலிஷா என்ற நபரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொட சமிந்தவின் மகனே மலிஷா.
அவரது குண்டர்கள் வந்து வெட்டினர். வழியில் அந்த மக்களைப் பிடித்தோம். அந்த நபர்களின் கைகளிலும் வெடிகுண்டு இருந்தது. தற்போது அந்த நபர்கள் தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா இல்லையா என்பது பொலிஸாரின் பொறுப்பாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் போது பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.