இலங்கையில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழப்பு!
அனுராதபுரம் வைத்தியசாலையில் மயக்க மருந்து செலுத்திய நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மரணம் கடந்த மாதம் 06. 28ஆம் திகதி நிகழ்ந்ததாகக் அந்தச் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரணம் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளியின் அக்குளில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு மயக்க ஊசி செலுத்தியும் சுயநினைவு வராமல் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





