மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் இராணுவ புரட்சி.. ஆட்சியை பிடித்ததாக அறிவிப்பு..
மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் இராணுவத்தினர் ஆட்சியை கைபற்றியுள்ளனர்.
புரட்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
தலைநகர் லிப்ரெவெல்லியில் ஆட்சி கவிழ்ப்பை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜனாதிபதி தேர்தலில் அலி போங்கோ 3-வது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் ராணுவத்தினர் ஆட்சியை பிடித்ததாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர்.
இதனிடையே வீட்டுக்காவலில் உள்ள அதிபர் போங்கோ உதவி கோரியுள்ளார். காபோன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)