உலகம் செய்தி

“நான் உன்னை நேசிக்கிறேன்” – எப்ஸ்டீன் கோப்பில் இருந்து கசிந்த காதல் கடிதம்!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் எஸ்டேட் (Jeffrey Epstein) புகைப்படங்களின் சமீபத்திய தொகுப்பில் காதல் கடிதம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஷெரிப் அலுவலக (Sheriff’s Office) கைதி ஒருவரின் கோரிக்கை படிவம் அதில் இடம்பெற்றுள்ளது.

அதில் “என் வாழ்க்கையின் காதல்” மற்றும் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது.

டிசம்பர் 25, 2008 எனத் திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தை யார் எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் கையெழுத்துக்கள் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் (Jeffrey Epstein) கையெழுத்துக்களுடன் ஒத்துப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், காங்கிரஸ் எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தை நிறைவேற்றியது. அதாவது நீதித்துறை டிசம்பர் 19 ஆம் திகதிக்குள் பெரும்பாலான எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையை நிதியாளர் எப்ஸ்டீனின் எஸ்டேட்டிலிருந்து பல புதிய படங்கள் சமீபத்திய வாரங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.

சில படங்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரைக் காட்டுகின்றன.

சிறார் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாலியல் கடத்தலுக்கு சதி செய்தல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருந்த எப்ஸ்டீன் ஆகஸ்ட் 2019 இல் சிறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தொடர்பான சர்ச்சைகள் பூதாகாரமான விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!