நிலக்கரி கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்
செங்கடலில் நிலக்கரி ஏற்றிச் சென்ற கிரீஸ் கப்பலின் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியதைக் காட்டும் காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமன் நாட்டின் ஹுதைடா துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக கப்பல் முற்றாக மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலின் போது, சுமார் 22 ஊழியர்கள் இருந்தனர் மற்றும் அவர்கள் அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் தாக்குதலில் இறந்தார்.
அமெரிக்க கடற்படையினர் விமானம் மூலம் மற்ற குழுவினரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி அமைப்பு தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
அதன்பின், ஹவுதிகள் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல் இதுவாகும்.
இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஈரான் ஆதரவு ஹூதிகள் கூறுகின்றனர்.