கருத்து & பகுப்பாய்வு செய்தி

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் மர்மம் – பல ரகசியங்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள ஆதாரங்கள்

முதன்முறையாக நிலவின் இருண்ட பக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்தாண்டு சாங்’இ-6 (Chang’e-6) விண்கலத்தின் மூலம் நிலவில் இருந்து மண் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் சூரிய குடும்பம் உருவாவதற்கு முன்னைய காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் அரிய விண்கல்லின் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மிகவும் அரிய வகை விண்கல்லின் துண்டுகளை குவாங்சோ இன்ஸ்டிடியூட் ஒப் ஜியோகெமிஸ்ட்ரி (Guangzhou Institute of Geochemistry) தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த விண்கல் துண்டுகள் பொதுவாக சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் காணப்படுபவை. மேலும் தண்ணீர் மற்றும் கரிமப் பொருட்களால் செறிவூட்டப்பட்டவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் வளிமண்டலம் இல்லாததால், அதன் மீது விழும் விண்கல் மோதல்களின் பதிவுகளை மாறாமல் நிலவு பாதுகாக்கிறது.

இது ஆரம்பகாலச் சூரிய குடும்பத்தின் இயற்கையான ஆவணக்காப்பகமாக செயல்படுகிறது.

இந்த மாதிரிகளின் விஞ்ஙான அமைப்பை ஆய்வு செய்வதன் மூலம், நிலவு மற்றும் பூமிக்குத் தண்ணீர் போன்ற அத்தியாவசியக் கலவைகள் எவ்வாறு வந்தன என்பதை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சாங்’இ-6 விண்கலம், சந்திரனின் தூரப் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் ஆழமான பள்ளமான தென் துருவ-ஐட்கென் படுகையில் (South Pole–Aitken Basin) தரையிறங்கியது.
அந்தப் பகுதியில் பண்டைய சிறுகோள் மோதல்கள் மற்றும் சந்திரனின் மேன்டில் பகுதிகளிலிருந்து வந்த பாறைகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் கண்டறியப்பட்ட விண்கல் துண்டுகள், சந்திரப் பாறைகளுடன் பொருந்தாமல், சூரிய குடும்பத்தின் ஆரம்ப வரலாற்றைத் தாங்கி நிற்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!