ஹுலந்தாவ பகுதியில் வர்த்தகரின் வீட்டில் 9 மில்லியன் மற்றும் நகைகளை கொள்ளையடித்த கும்பல்
ஊருபொக்க, ஹுலந்தாவ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் சுமார் ரூ. 10 மில்லியன் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் மொபைல் போன்கலை கொள்ளையடித்துள்ளனர்.
சுகயீனமுற்றிருந்த தனது மகனின் சத்திரசிகிச்சைக்காகவே கொள்ளையிடப்பட்ட பணம் வைத்திருந்ததாக குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூன் 11) காலை சுமார் 11.00 மணியளவில் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் உறவினர்கள் நான்கு பேர் அவரது மகனைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, சிவப்பு நிற காரில் வந்த நான்கு பேர், கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட வீட்டுக்குள் இருந்த 09 பேரை அச்சுறுத்தி 02 அறைகளில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்து சுமார் 04 பவுண் தங்கம் மற்றும் 03 கையடக்கத் தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், குறித்த வர்த்தகரின் மற்றுமொரு உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர், மற்றையவர் கொள்ளையர்களிடம் சிக்கிய போது குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
30 நிமிடங்களுக்கு மேலாக ஆயுதம் ஏந்திய குழுவினர் வீட்டில் தங்கியிருந்து சிறு குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க நகையை மாத்திரம் திருப்பி கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாத்தறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஊர்பொக்க பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.