16 ஆண்டுகளுக்கு மேலாக தனியையில் இருந்த முதலை.. முட்டைகளை இட்ட சம்பவம்
அமெரிக்காவில் உயிரியல் பூங்கா ஒன்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது.
தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை பார்த்தீனோஜெனிசிஸ் அல்லது கன்னி பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. ராஜ நாகம்,வேளான் மீன், கலிபோர்னியா காண்டோர் கழுகுகள் போன்றவற்றில் பார்த்தீனோஜெனிசிஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தாலும், முதலை இனங்களில் முதல் கன்னி பிறப்பு இதுதான் என பயாலஜி வெண்ணர்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கன்னிப்பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப்பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், அதன் மூலமே கன்னிப்பிறப்பு நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)