பிரான்ஸில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
பிரான்ஸில் இறைச்சி உண்ணும் பழக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2003 ஆம் ஆண்டில் நபர் ஒருவர் ஆண்டுக்கு 26.3 கிலோ இறைச்சி உட்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 21.3 கிலோ இறைச்சி உண்ணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 5.8% சதவீதமாக குறைந்துள்ளது.
இறைச்சியின் விலை அதிகரிப்பு ஒரு மிக முக்கியமான காரணம் எனவும், பிரான்ஸில் வாங்கும் திறன் குறைவடைந்துள்ளதாகவும், வாடகை, எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக இறைச்சி வாங்கும் வீதம் குறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)