ரஷ்யாவில் ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட பூனை
ரஷ்யாவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட பூனை ஒன்று உயிரிழந்துள்ளது.
பூனையின் உரிமையாளர்களிடம் RZhD ரயில் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. அது தெருப்பூனை என்று நினைத்து அதை ரயில் நடத்துநர் வெளியே வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தச் சம்பவம் இம்மாதம் 11ஆம் திகதி கிரோவ் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடுங்குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் டுவிக்ஸ் (Twix) என்ற அந்தப் பூனை ரயிலிலிருந்து வீசப்படுவது காணொளியில் தெரிகிறது.
பூனை தனது பயணப் பெட்டியிலிருந்து வெளியேறி ரயில் பெட்டியில் நடந்துகொண்டிருந்தது. பூனையை வீசிய ரயில் நடத்துநர் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதில் 70,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். ரயில் நடத்துநர் வேலையிலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற மனுவில் 200,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.