இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , தற்போது அதிகளவான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
தொழுநோயை கட்டுப்படுத்தும் வகையில் 10,000 விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிறுவர்களிடையே பரவும் தொழுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தவகையில், தொழுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொழுநோய் கட்டுப்பாடு பிரிவு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.