வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா, அமெரிக்க இராணுவங்கள் கூட்டு போர் பயிற்சி
தென்கொரியா, அமெரிக்க இராணுவங்கள் இந்த மாத இறுதியில் ஐந்து ஆண்டுகளில் தங்கள் மிகப் பெரிய கூட்டு களப் பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஒரு நீண்ட தூர பி-1பி குண்டுவீச்சு விமானத்தை கொரிய தீபகற்பத்திற்கு பறக்கவிட்டது.
இந்நிலையில் இத்தகைய பயிற்சிகளுக்கு எதிராக முன்னோடியில்லாத வகையில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய அச்சுறுத்தியுள்ளது. ஏவுகணை சோதனைகளுடன் வரவிருக்கும் பயிற்சிகளுக்கு பதிலளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் சுதந்திரக் கவசப் பயிற்சியை நடத்தப்போவதாக கூறியுள்ளன. இந்த பயிற்சி நடவடிக்கை மார்ச் மாதம் 13 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)