துருக்கியில் நிலநடுக்கத்தின் அழிவுகளுக்கு மத்தியிலும் தேர்தலை நடத்த திட்டம்
துருக்கி பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்ட தினத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்புகளை துருக்கிய ஜனாதிபதி ரிஷப் தையிப் எர்டோகன் வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில், நிலநடுக்கத்தின் பின் விளைவுகளை அரசாங்கம் கையாள்வதை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தங்கள் பதிலை மே 14 அன்று வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.
துருக்கிய நிலநடுக்கத்தில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 இல்சத்து 4 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பல மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதேநேரம் நிலநடுக்கத்தில் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)