சிங்கப்பூரில் பணியில் இருப்போர் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்
சிங்கப்பூரில் பணியில் இருப்போரின் எண்ணிக்கை மெதுவான வளர்ச்சியடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
வெற்றிடங்களில் உள்ள வேலைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஆறாவது காலாண்டாகக் குறைந்தது.
ஊழியர் தேவை தணிந்து வருவதை அது காட்டுகிறது. இருந்தபோதும் ஆட்குறைப்புச் செய்யப்பட்டோரில் கூடுதலானோர் இந்தக் காலாண்டில் புதிய வேலைகளைப் பெற்றனர்.
சுகாதார, சமூகச் சேவைகள், நிதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் அவர்கள் சேர்ந்தனர். அவற்றில் பொதுவாகக் கூடுதல் ஊதியங்கள் வழங்கப்படுகின்றன.
வேலைச் சந்தை நிலவரம் பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இவ்வாண்டின் (2023) மூன்றாம் காலாண்டில் 4,000க்கும் அதிகமானோர் வேலையிழந்தனர்.
(Visited 6 times, 1 visits today)