IPL Update – மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது.
இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதனையடுத்து குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் ஆர்சிபி அணிக்கு இணைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் ஒரு பதிவை பாண்ட்யா வெளியிட்டுள்ளார்.
அதில் இது பல அற்புதமான நினைவுகளைக் திரும்ப கொண்டுவருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பயிற்சி பெற்றது குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.