செய்தி

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை பறித்த மண் சரிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை ரேங்கல் பகுதியில் ஒரு தம்பதியும் அவர்களின் 3 பிள்ளைகளும் வீட்டில் இருந்தபோது நிலச்சரிவு நேர்ந்தது. பெற்றோர், மூத்த பிள்ளை ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

இளைய பிள்ளைகளையும் அவர்களின் அண்டை வீட்டுக்காரர் ஒருவரையும் இன்னும் காணவில்லை என்று அலாஸ்கா பொதுப் பாதுகாப்புத் துறை கூறியது.

அந்தப் பிள்ளைகளில் ஒருவர் 12 வயதுடையவர் எனவும் மற்றொருவர் 11 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மரணமடைந்த பெற்றோர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தனர். மலையிலிருந்து தொடங்கிய நிலச்சரிவில் 3 வீடுகள் சேதமுற்றன.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி