அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான உறவு – பைடன் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான உறவு இருப்பது உலகிற்கு நல்லது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான உறவு அவசியம் என அவர் குறிப்ிபட்டுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஏப்பெக் (APEC) மாநாட்டில் அவர் பேசினார்.
சீன அதிபர் சி சின்பிங்குடன் (Xi Jinping) நடத்திய சந்திப்பைப் பற்றியும் பைடன் கருத்துரைத்தார். அமெரிக்கா அதன் உறவகளைப் பன்முனைப்படுத்துகிறது என்றும் சீனாவுடன் உறவைத் துண்டிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா பசிபிக் நாடு என்பதால் அது பசிபிக் வட்டாரத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளதாகத் சியிடம் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க-சீன உறவு உலகின் ஆக முக்கியமான இருதரப்பு உறவு என்று சி நேற்று கூறியதை பைடன் சுட்டினார்.
இரு தலைவர்களும் பதற்றங்களைத் தணிக்கவும் ராணுவத் தொடர்புகளை மீண்டும் தொடங்கவும் இணங்கினர்.