போர்த்துக்கல் தேவாலயத்தில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு : மூன்று பாதிரியார்கள் இடைநீக்கம்!
போர்த்துக்கலின் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகம் குறித்து மூன்று பாதிரியார்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போர்டோ மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போர்ச்சுகலின் கத்தோலிக்க தேவாலயத்தில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து, சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட விசாரணையில் பாதிரியார்களின் பெயர்கள் அடங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை போர்டோ மறைமாவட்டம் 12 மதகுருமார்களின் பெயர் பட்டியலை தங்களுக்கு அனுப்பியதாகவும், குறித்த அனைவரும் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 12 பேரில் நான்கு பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மிகுதியாக உள்ள ஏழு பேரின் மீது விசாரணைகள் முன்னெடுக்கபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1950 முதல் போர்ச்சுகலில் கத்தோலிக்க மதகுருமார்களால் குறைந்தது 4815 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.