செய்தி வட அமெரிக்கா

உயிரை காத்த மனிதன்.. நன்றி தெரிவிக்க வீட்டிற்கே வந்த மான் கூட்டம்: வைரல் வீடியோ

உயிரைக் காப்பாற்றிய மனிதனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மான் கூட்டம் ஒன்று வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோவில், முதலில் மான் ஒன்று வேலி தாண்டிய போது கம்பியில் சிக்கிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.அப்போது அந்த வழியில் நின்ற மனிதர் ஒருவர், கம்பி வேலியில் சிக்கிய மானை அதிலிருந்து விடுத்தார்.

ஆனால் நீண்ட நேரமாக கம்பியில் சிக்கிக் கொண்டு இருந்ததால் மான் களைத்துப்போய், மீட்கப்பட்ட பின்பும் தரையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தது போல் தெரிகிறது.இந்த சம்பவங்களை அந்த நபர் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார்.அதே வீடியோவில் காட்சிகள் வேறொரு நாளாக தெரியும் நிலையில், மான் ஒன்று உயிரை காப்பாற்றிய மனிதனின் வீட்டிற்கு வெளியே நிற்பதை பார்க்க முடிகிறது.வீடியோவின் அடுத்த காட்சியில் மான் கூட்டம் ஒன்று அந்த மனிதரின் கேரேஜுக்குள் நுழைவது இடம்பெற்றுள்ளது.

Belgesel Zamanı ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், மான் தனது கூட்டத்துடன் மீட்டதற்கு நன்றி தெரிவிக்க மனிதனிடம் வந்துள்ளது என்று கருத்து பதிவிடப்பட்டுள்ளது.இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.இருப்பினும் கம்பி வேலியில் இருந்து மீட்கப்பட்ட மானின் கொம்புகள் வீடியோவில் பின்னர் காணப்பட்ட மானை விட மிகவும் சிறியதாக இருப்பதால் நெட்டிசன்கள் கருத்து வேறுபாடுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி