மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்!! தம்பதியினருக்கு விளக்கமறியல்
மலேசியாவின் செந்தூல் நகரில் இலங்கையர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தம்பதியினர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் அல்ல என்றும் அவர்கள் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தம்பதியினர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதன்படி, இன்று (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் அவர்கள் வைக்கப்பட்டனர்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை ஆரம்பித்த கோலாலம்பூர் பொலிஸார், ஹுலு லங்காட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுளளது.