நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய பெரும்பாலான பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையே இந்நிலைமைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுரைச்சோலையில் ஒரு ஜெனரேட்டரை இயக்க 12 பொறியியலாளர்கள் தேவை. ஆனால் அவர்களில் பாதிபேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே அதனை மீண்டும் இயக்குவதற்கு கடினமான சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது.
இலங்கையின் தேசிய மின்சாரத் தேவையில் நுரைச்சோலை அனல்மின் நிலையமானது 40 வீதத்தை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)