செய்தி தமிழ்நாடு

தமிழக முதல்வரிடமிருந்து இலங்கையர்களுக்கு 1,591 வீடுகள்: ஸ்டாலின் புதிய திட்டம்

இந்தியாவில், தமிழகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டத்தை, தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதிதாக கட்டப்பட்ட 1,591 வீடுகள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் மேல்மணவூர் கிராமத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் இது தொடர்பான விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது, ​​தமிழகத்திற்கு இடம்பெயந்து சென்ற இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 19,498. இந்த மக்கள் மாநிலத்தின் 29 மாவட்டங்களில் 104 புனர்வாழ்வு முகாம்களில் வாழ்கின்றனர்.

இவர்களுக்காக 342 கோடி இந்திய ரூபாய் செலவில் பல கட்டங்களாக 7,469 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நவம்பர் 2021ல் தொடங்கப்பட்டது. அதன் மதிப்பு 176.02 கோடி ரூபாய். அங்கு 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!