தெற்கு டெவோன் கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட உக்ரேனிய சிறுமி உயிரிழப்பு!
 
																																		தெற்கு டெவோனில் உள்ள கடற்கரையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட உக்ரேனிய சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமையன்று டெவோனில் உள்ள டாவ்லிஷ் பகுதியில் இருந்த நிலையில், காணாமல்போனதாக தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுமியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், தெற்கு டெவோனில் உள்ள கடற்கரையில் மயங்கிய நிலையில் அவர் இனங்காணப்பட்டார்.
பின்னர் அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அவர் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
