ஜெர்மனியில் புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார்கள்!
ஜெர்மனியை சேர்ந்த வாடகைக் கார் நிறுவனம், ஓட்டுநரில்லா மின்சார கார்களை, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு அனுப்பிவருவதாக தெரியவந்துள்ளது.
நவீன தொழில்நுட்பம் மூலம், கட்டுப்பாடு அறையிலிருந்து ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் அந்த காரை, வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு ஓட்டிச்சென்று இறங்கிகொள்ளலாம்.
அதன்படி மீண்டும் அந்த கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தானாகத் திரும்பிவிடுகிறது. வே என்ற அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், ஐரோப்பிய சாலைகளில் முதல்முதலாக ஓட்டுநரில்லா கார்களை இயக்கியதாகவும், நகர சூழலில், சொந்தமாக கார் வைத்துக்கொள்ள விரும்பாதவர்களை மனதில் வைத்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)