ரஷ்யாவுடனான எல்லைப்பகுதியில் வேலி அமைக்கும் பின்லாந்து!
ரஷ்யாவுடனான தனது எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையை பின்லாந்து ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் 200 கிலோமீற்றர் நீளமான வேலி அமைக்கப்படவுள்ளதாக பின்லாந்து தெரிவித்துள்ளது.
3 மீற்றர் (10 அடி) உயரமுடையதாக இந்த வேலி இருக்கும். வேலியின் மேற்பகுதியில் முட்கம்பிகள் பொருத்தப்படும் என பின்லாந்து எல்லைக் காவல் படை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் 1,340 கிலோமீற்றர் நீளமான எல்லையை பின்லாந்து பகிர்ந்துகொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில், ரஷ்யாவுடன் மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ள நாடு பின்லாந்து.
ரஷ்யாவில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அஞ்சி, நாட்டைவிட்டு தப்பியோடுபவர்கள் பின்லாந்துக்குள் நுழைவது அதிகரித்துள்ளதால் வேலி அமைப்பதற்கு பின்லாந்து தீர்மானித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் இணைவதற்கும் பின்லாந்து விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பான விவாதம் பின்லாந்து பாராளுமன்றத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.