வாக்னர் கூலிப்படைத் தலைவர் மரணம் – பெலாரஸ் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் விமான விபத்தில் மரணம் அடைந்ததற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறுவதனை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்கஷென்க்கோ (Alexander Lukashenko) கூறியிருக்கிறார்.
பிரிகோஷினைப் படுகொலை செய்ய புட்டின் உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக பிரிகோஷின் நடத்திய கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஏற்படுவதற்கு லுக்கஷென்க்கோ உதவியிருந்தார்.
பிரிகோஷினின் விமானம் ரஷ்யாவில் எவ்வாறு விழுந்து நொறுங்கியது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
அந்த விமானத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது. விமானத்தை நோக்கி ஏவுகணை பாய்ச்சப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தை அது நிராகரித்தது.