சீனாவில் சுட்டெரிக்கும் வெயில் – செல்லப்பிராணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
சீனாவில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கடுமையாக பாதிக்கப்படும் செல்லப்பிராணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
செல்லப்பிராணிகள் பாதுகாக்க மக்கள் பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.
தாங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட 4 கால் நண்பர்களை பாதுகாக்க சிறப்பு குளிரூட்டி உடைகள், குளிர்ச்சியான பாய்கள், தொப்பிகள் உள்ளிட்டவற்றை வாங்கி அவற்றுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் நாய்களின் பிரத்யேக உடைகளுக்கு 70 முதல் 80 டாலர்கள் வரை செலவழிக்க தயாராக உள்ளனர்.
சீனாவில் தம்பதிகள், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக செல்லப்பிராணிகளை தத்தெடுத்து வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதனால் சீனாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 170 மில்லியனாக இருந்த நாய் மற்றும் பூனைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 190 மில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அங்கு உயிரிழக்கும் நாய்களில் தற்போது 50 முதல் 56 சதவீதம், வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.