ஏழு ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அவுஸ்திரேலிய வைத்தியரின் அனுபவம்
ஏழாண்டுகளாக ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளிடம் சிக்கியபோதும், பெர்த்தில் இருந்து வந்த ஒரு வைத்திருக்கு பைபிளின் வார்த்தைகளும், கடவுள்மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கையும் உதவியது.
ஏழ்மையான நாடான புர்கினா பாசோவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஒரு குழுவால் 80 வயதான வைத்தியர் கென்னத் எலியட், ஏழு வருடங்களாக தான் சந்தித்த கொடுமைகளையும், பரிசுத்த வேதாகமத்தை நம்பி அவற்றை எப்படி சமாளித்தார் என்பதையும் ஒரு பொது விழாவில் பகிர்ந்து கொண்டார்.
2016 ஆம் ஆண்டில், அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து வைத்தியர் கென்னத் எலியட் மற்றும் அவரது மனைவி ஜோஸ்லின் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இந்த தம்பதியினர் 1972 ஆம் ஆண்டு முதல் புர்கினா பாசோவில் உள்ள டிஜிபோ என்ற நகரத்தில் மருத்துவ கிளினிக்கை நடத்தி வந்தனர். இருவரும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய எமிரேட் ஆஃப் சஹாராவால் கடத்தப்பட்டனர்.
ஜோஸ்லின் கடத்தப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு கும்பலால் விடுவிக்கப்பட்டார். பின்னர் ஜோஸ்லின் எலியட்டின் விடுதலைக்காக மன்றாட முன் வந்தார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டில் வைத்தியர் கென்னத் எலியட் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, குடும்பம் தனியுரிமைக்காக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தது.
ஏழு வருட சிறைவாசத்தின் போது அதை எவ்வாறு தாங்கினார் என்று மாநாட்டில் எலியட்டிடம் கேட்கப்பட்டது. மென்மையாகப் பேசும் அவர் தாழ்ந்த குரலில் பதிலளித்தார்.
தீவிரவாதிகளின் கைகளில் பல உடல்ரீதியான சவால்களை அடிக்கடி எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார். ‘ஒரு கட்டத்தில் என்னால் நடக்கக்கூட முடியவில்லை.
“எனது மருத்துவ வாழ்க்கையில் நான் ஒரே ஒரு ஸ்கர்வி நோயைப் பார்த்திருக்கிறேன், அது நான்தான்” என்று எலியட் உணர்ச்சிவசப்பட்டார்.
ஸ்கர்வி என்பது வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய். ஸ்கர்வி என்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.
‘இறுதியாக என்னைக் கைப்பற்றியவர்கள் எனக்காக சில வைட்டமின் சி மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர்’ என வைத்தியர் கென்னத் மேலும் கூறினார்.
பயங்கரவாதிகள் பைபிளை அனுமதிக்காததால், மனப்பாடம் செய்த வேதங்களை ஓதிக் கொண்டிருந்தேன். “பைபிள் வசனங்கள் பெரும் உதவியாக இருந்தன, ஏனென்றால் என்னையும் என்னைக் கைப்பற்றியவர்களையும் நான் தியானிக்கவும் ஜெபிக்கவும் முடிந்தது,” என்று அவர் கூறினார்.
ஏழைகளுக்கு உதவுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதியினர், ஆப்பிரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவை சேவை செய்ய தேர்வு செய்தனர்.
இங்கு மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை. இதனால் தம்பதி கடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையடைந்தனர்.
புர்கினா பாசோ குறைந்த வருமானம் கொண்ட நாடு. விவசாயம் மற்றும் பருத்தி உற்பத்தியை நம்பி மக்கள் வாழ்கின்றனர்.
தங்கச் சுரங்கங்கள் இருந்தாலும், நாட்டு மக்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.