பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும் – சரத் வீரசேகர!
இலங்கை தேரவாத சிங்கள பௌத்த நாடு ஆகவே பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள்.
பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளினால் தான் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் குருந்தூர் மலையில் பழமையாந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇ பௌத்த வழிபாடுகளுக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தடையேற்படுத்தியுள்ளார்கள்.
பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு பொறுமையுடன் செயற்படுகிறோம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.