விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற 20 வயது அல்காரஸ்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.
இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.