சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தொகுதி கடனை பெற்றுக்கொண்டது இலங்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் முதலாம் கட்ட கடன் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய 333 மில்லியன் டொலர்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த திங்களன்று அனுமதியளித்தது.
அதற்கமையயே இக் கடன் திட்டத்தின் முதற்கட்டமாக 333 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் சுமார் 3 பில்லியன் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பரில் எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)