டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும்!
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரித்துச்செல்லுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒருவாரகாலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்பயாக அதிகரித்துச்சென்றதுடன், மீண்டும் கடந்தவார இறுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் படிப்படியாக அதிகரித்துச்செல்லுமெனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதனையொத்த கருத்தொன்றை வெளியிட்டிருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்ததன் பின்னர் வெளியகக்கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை ஆரம்பிக்கமுடியும் எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 185 – 200 க்குள் பேணமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.