புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனை!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய இது தொடர்பில்நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் வரி வசூலிப்பு சட்டத்தில் ஒரு எழுத்தும் மாற்றப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டிலிருந்த அரசாங்கம் தற்போது , சில மாற்றங்களை செய்வதற்கு இணங்கியுள்ளது. போராட்டத்தின் காரணமாகவே அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை மாற்ற முடிந்துள்ளது.
எவ்வாறிருப்பினும் எம்மால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைகளுக்கு இதுவரையிலும் தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளா