மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இடைநிறுத்த கோரி மனுத்தாக்கல்!g

தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது மனுவை விசாரித்து இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தனது மனுவில் மேலும் கோரியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)