சீனாவின் திருமண விகிதம் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக வீழ்ச்சி
சீன அரசு இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சீனாவின் திருமண விகிதம் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக குறைந்துள்ளது.
இந்த தரவு அறிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்டது. அதன்படி 2022-ம் ஆண்டு சீனாவில் 6.83 மில்லியன் ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது.
2021ல் திருமணம் செய்து கொண்ட 7.63 மில்லியன் ஜோடிகளை விட இது 10.5 சதவீதம் குறைவு. மேலும் இது 1986-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த திருமண விகிதம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
சீனாவில் அரசாங்கம் விதித்த கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் சீன இளைஞர் சமூகத்தை முடிந்தவரை திருமணத்திலிருந்து வெகு தொலைவில் வைத்திருக்கின்றன என்று கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் சீனாவின் பிறப்பு விகிதம் 60 ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்திருந்து.
இது 1949 க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த பிறப்பு விகிதமாகும், மேலும் இந்த நிலைமை பல நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
1.4 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட சீனாவில், பிறப்பு விகிதம் கணிசமாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் அதிக முதியோர் மக்கள், குறைந்த இளைஞர் சமூகம் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கொண்ட நாட்டை உருவாக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.