இந்தியா – பாகிஸ்தான் முறுகலுக்கு தீர்வு எட்டப்பட்டது!
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த கலப்பு முறையில் நடத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நாளை மறுதினம் தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை தொடர் எப்படி நடத்தப்படும் என்பதில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முட்டுக்கட்டை நிலவியது.
இருப்பினும், இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இறுதியாக ஒரு கலப்பின வடிவத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய அணி பங்கேற்காத அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் என இந்திய செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மற்றும் இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.