கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் அத்துமீறி நுழைய முயன்றவரால் பதற்றம்!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது ஒருவர் தேவாலயத்திற்குள் நுழைய முயன்றுள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இம்தியாஸ் என்ற நபர் கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்/
மாத்தளை அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடத்தையும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடத்தையும் கொண்ட 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவாலய ஆராதனைகளை கேட்பதற்காக தான் வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 14 times, 1 visits today)