சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெளிகண்ட்டல் ஆற்றுப்பகுதி மற்றும் வயல்ப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் அகழ்வு செய்யப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் டிப்பர் வாகனம் மூலம் ஏற்றி எந்தவித அனுமதியும் இன்றி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.





