ஐரோப்பா

நோவா ககோவ்கா அணை உடைந்ததில் ஐவர் பலி!

நோவா ககோவ்கா அணை உடைந்ததில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவால் நிறுவப்பட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) மூவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையையும் சேர்ந்துதான் ரஷ்ய பிரதிநிதி அறிவித்துள்ளாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் ஐவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணை வெடிப்பினால் ஏற்பட்ட அழிவின் முழு அளவு மெல்ல மெல்ல தெளிவாகத் தெரிகிறது.

இதன்படி  14,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளை மேற்கோள் காட்டி சுமார் 4,300 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறியது.

600 சதுர கி.மீ.க்கும் அதிகமான கெர்சன் பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், 2000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் சுத்தமான தண்ணீர் இன்றி தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!