ககோவ்கா அணை பகுதியில் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – செலன்ஸ்கி குற்றச்சாட்டு!
ககோவ்கா அணை உடைப்பால் சுமார் இலட்சக் கணக்கான மக்கள் சாதாரண குடிநீர் இன்று தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவை முற்றிலும் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்ற நிலையில் அவர்களுக்கு அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யர்கள் உதவவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
உக்ரைன் துருப்புகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த செலன்ஸ்கி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் மட்டுமே அவர்களால் உதவ முடியும் என்றும் குறிப்பிட்டார்.
(Visited 21 times, 1 visits today)