பிரித்தானியாவில் வீடு ஒன்றில் வெடித்த எரிவாயு – அண்டை வீட்டாரின் துணிகர செயல்
பிரித்தானியாவின் போர்ன்மவுத் நகரில் உள்ள வீட்டில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் போர்ன்மவுத் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது, இதில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த வெடிப்பு விபத்து மிக பிரம்மாண்டமாக இருந்த நிலையில், அருகில் உள்ள வீடுகளையும் இந்த வெடிப்பு விபத்து உலுக்கியது.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் காலை 9:45 மணியளவில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மஸ்க்லிஃப் ஹவுசிங் எஸ்டேட்டில் உள்ள கன்வில் கிரசென்ட்டின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வீட்டில் ஏற்றப்பட்ட எரிவாயு விபத்தை பார்த்த அப்பகுதியின் அண்டை வீட்டார் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை மீட்டார்.முன்னதாக வெடிப்பு விபத்தில் ஏற்பட்ட தீயை, அணைப்பான்கள் கொண்டு அணைத்து விட்டு துணிச்சலுடன் வீட்டிற்குள் புகுந்த அண்டை வீட்டுக்காரர் அந்த வீட்டின் உரிமையாளரான பெண்ணை இடிபாடுகளில் இருந்து மீட்டார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்மணியை உடனடியாக சவுத்தாம்ப்டன் பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.பெண்மணியின் தற்போதைய உடல்நிலை குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் வெடிப்பு விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.