இலங்கையில் இன்று முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் நேறறு காலை 6.30 முதல் இன்று (09) காலை 6.30 வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை இரத்து செய்தமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்தாளர்கள், கதிரியக்க நிபுணர்கள், தாதி உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் சாரதிகள் உள்ளிட்ட கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்களும் தாதியர்களும் கலந்துகொள்ளவில்லை.