வங்கதேசத்தில் அடித்து கொல்லப்பட்ட இந்து இளைஞர் – கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்
வங்கதேசத்தின்(Bangladesh) மைமென்சிங்(Mymensingh) மாவட்டத்தில் இந்து இளைஞர் திப்பு சந்திர தாஸ்(Tipu Chandra Das) கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதற்கு கனேடிய(Canada) பாராளுமன்ற உறுப்பினர் ஷுவ் மஜும்தார்(Shuv Majumdar) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தெற்காசிய நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகள் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மைமென்சிங்கில் நடந்த இந்தக் கொடூரமான செயல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அராஜகம் மற்றும் அட்டூழியங்களை எதிரொலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இறுதியில், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினருக்கும் எதிரான படுகொலைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Muhammad Yunus) அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மஜும்தார் அழைப்பு விடுத்துள்ளார்.





