ஐஎஸ் அமைப்பின் பின்னணியில் தந்தை, மகன் நடத்திய கோரத் தாண்டவம் – புதிய தகவல்கள் வெளியீடு
சிட்னி Bondi Beach தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ‘டென்னிஸ் பந்து குண்டுகள்’ மற்றும் பைப் குண்டுகளைப் பயன்படுத்தியதாகப் புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
15 பேரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவீத் அக்ரம், சிகிச்சைக்குப் பின் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாகத் தந்தை மற்றும் மகன் இருவரும் ஐஎஸ் (IS) அமைப்பின் கொடியுடன் வீடியோ வெளியிட்டதும், பல மாதங்களாகத் துப்பாக்கிப் பயிற்சி பெற்று தாக்குதலைத் திட்டமிட்டதும் பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் அப்பகுதியை உளவு பார்த்த சிசிடிவி (CCTV) காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.





