உலகம் முழுவதும் Microsoft Outlook செயலிழப்பு! அதிர்ச்சியில் பயனர்கள்

Microsoft Outlook செயலிழந்துள்ளதாகவும், இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Downdetector அறிக்கையின்படி, Microsoft Outlook செயலிழிப்பு குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான நிறுவனங்களால் திறமையான செயல்பாட்டை உறுதிசெய்ய Microsoft Outlook பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையிலேயே, செயலிழப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மின்னஞ்சல் தளத்தை அணுக முயற்சிக்கும்போது, “சேவை கிடைக்கவில்லை,” “HTTP பிழை 503. சேவை கிடைக்கவில்லை.” என்ற செய்தி தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)