கார் இருளில் பூத்த ஒளி : 02 வருடத்திற்கு பிறகு கலைக்கட்டிய பெத்லகேம் (Bethlehem)!
காசாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், இயேசு பிறந்ததாக நம்பப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெத்லகேம் தேவாலயத்தில் உள்ள சிறிய குகைக் குழியில் “கிறிஸ்துமஸ் இரவு” என்ற பாரம்பரிய பாடல் இம்முறை ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கிறிஸ்துமஸ் இரவில், போர் புதைக்கப்படுகிறது, கிறிஸ்துமஸ் இரவில், காதல் பிறக்கிறது” என்று உள்ளூர் பாடகர் குழு ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு வேலையில் பாடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.
“சிரமங்கள், இருள் எதுவாக இருந்தாலும், எப்போதும் ஒரு ஒளி இருக்கிறது, அந்த நம்பிக்கை எப்போதும் உயிருடன் இருக்கிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது,” என்று உள்ளூர் கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, காசாவில் போர் இடம்பெற்ற நிலையில் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் பாரம்பரிய விழாக்கள் மற்றும் அலங்காரங்கள் மற்றும் இசை இல்லாமல் ஒரு இருண்ட நிகழ்வாகவே இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு, குடும்பங்கள் மீண்டும் மேங்கர் சதுக்கத்திற்கு திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





