பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டியின் (Rachida Dati) வீட்டில் சோதனை!
பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி (Rachida Dati) ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
தேசிய நிதி வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2010 மற்றும் 2011 க்கு இடையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரச்சிடா டாட்டி எரிசக்தி குழுவான GDF சூயஸிடமிருந்து €300,000 இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறார்.
மேலும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் ஜனாதிபதி மக்ரோன் இருவரும் அவரைப் பகிரங்கமாக ஆதரித்து, குற்றமற்றவர் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.





